"கோயில் சொத்து கோயிலுக்குத்தான், யாரும் உரிமை கொண்டாட முடியாது"- திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பளீர்!

Update: 2022-07-09 01:05 GMT

"200 ஆண்டுகளுக்கு முன் இருந்தாலும் சரி, 500 ஆண்டுகளுக்கு முன் இருந்தாலும் சரி, கோயில் சொத்து  கோயிலுக்குத் தான்" என்று திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


"தமிழகத்தில் இந்து  கோயில் சொத்துக்கள், முறையாக நிர்வாகம் செய்யாமலும் பழங்கால  கோவில்களை பராமரிக்கபடாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது" என்று பல இந்து உணர்வாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவில் சொத்துக்கள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.   கூட்டத்தில் பங்கேற்ற பின் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்:

 200 ஆண்டுகளோ 500 ஆண்டுகளோ கோயில் சொத்து கோயிலுக்கு தான். நாங்கள் 'நீண்ட நெடிய காலம் இருந்து வருகிறோம் அதனால் எங்களுக்கு சொந்தம்' என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. திருக்கோயிலின் மூலவர் எப்போதும் இளவர் ஆக கருதப்படுவார். ஆகையால் அனைத்து கோவில் சொத்துக்களும் சட்டத்தின் பாரபட்சமின்றி மீட்கப்பட வேண்டும்.

என்று கூறினார்.


Full View


Tags:    

Similar News