எப்படி சம்பளத்தை நீ புடிக்கலாம்? மது போதையில் தலைமை ஆசிரியர் ரகளை!

Update: 2022-07-13 13:34 GMT
எப்படி சம்பளத்தை நீ புடிக்கலாம்? மது போதையில் தலைமை ஆசிரியர் ரகளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் வட்டார கல்வி அலுவலக அதிகாரியிடம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வட்டாரகல்வி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சேகர் என்பவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதாவது வட்டார கல்வி அதிகாரியிடம் எப்படி எனது சம்பளத்தை பிடிக்கலாம் என்று கேள்வி எழுப்பியது மட்டுமின்றி மேஜையில் இருந்த பைல்களை தூக்கி அதிகாரி தலையில் வீசினார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் கீழே குனிந்து விட்டார். இது பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரே மது அருந்திவிட்டு, கல்வி அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவத்திற்கு பெற்றோர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News