தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அவரது பிறந்த நாள் 'கல்வி வளர்ச்சி தினம்'மாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர். கனிவும், அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகியும் ஆவார். ஏழ்மையை ஒழிப்பதற்காக மக்களின் துயரைப் போக்குவதற்கு கடினமாக உழைத்தார். மேலும், சுகாதாரம், கல்வியை மேம்படுத்தவும் அதிகம் கவனம் செலுத்தினார். கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் என்றும் போற்றப்படுகிறார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிப்பதற்கு மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் எனக்கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar