மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன - ஏன் விதிக்கப்பட்டது?
வேலூர்: சமூக பாதுகாப்புத் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அக் கட்டுப்பாடுகளுள் ஒன்று, தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்து விரோத நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. பொதுவெளியில் இந்து மத தெய்வங்களை இழிவுப்படுத்துவதும், கோயில் சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்படுவதும், என பல சம்பவங்கள் தமிழக இந்துக்களை மன வேதனையடையச் செய்துள்ளது.
இதன் வரிசையில், தற்போது வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று "மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணியக்கூடாது."
இக் கட்டுப்பாடு இந்து மாணவர்களின் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மாணவர்கள் பெரும்பான்மையானோர் கையில் முடிக்கயிறு அனிந்திருக்கும் வழக்கம் இருந்து வருகிறது. "இவ் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது" என இந்து மத உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச் ராஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் " கம்மல், செயின், காப்பு, காசிக்கயிறு ஆகியவை இந்து மத அடையாளம். தான் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த போது செய்ய முடியாததை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கொண்டு உதயச்சந்திரன் செய்யும் வேலை இது. ரெவின்யூ துறையில் உள்ள டேவிட் ஆசிர்வாதம்." என்று பதிவிட்டுள்ளார்.
இப்பிரச்சினை தற்போது தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளை அரசு திரும்பப் பெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.