சேலத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாதி - தமிழகத்தில் அதிரடியாக களமிறங்கிய என்.இ.ஏ

Update: 2022-07-27 10:53 GMT

சேலத்தில் யாருக்கும் தெரியாமல் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மற்றொரு பயங்கரவாதியை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படும் கர்நாடக மாநிலம், திலக் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு நபர் பற்றிய தகவல் கூறினார்.

இதனை தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்த அப்துல் ஆலிம் முல்லா என்பவனை போலீசார் கைது செய்தனர். மேலும், சிலர் ஈரோட்டிலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து மாணிக்கம் பாளையம் என்ற இடத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் அல்கொய்தா பயங்கரவாதி ஒருவன் இத்தனை நாட்களா பதுங்கி வேலை செய்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் நாச வேலையில் ஈடுபடுவதற்காக சேலத்திற்கு பயங்கரவாதி வந்தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News