தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி!

Update: 2022-07-28 11:04 GMT

சென்னையில் குரங்கு காய்ச்சல் பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு அதிரடியாக அனுமதி வழங்கியிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதன் முதலாக கேரள மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் தோன்றியது. இதனால் மத்திய அரசு அனைத்த மாநிலங்களையும் உஷார்படுத்தியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் குரங்கு காய்ச்சல் கண்டறியும் ஆய்வகங்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அதே போன்று தமிழகத்திலும் சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் குரங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பார்வையிட்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 77 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Source: Polimer

Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News