சாமி சிலைகளை அகற்ற வந்த வருவாய்த்துறை அதிகாரிகள்! தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!
செங்கல்பட்டு: சிவன் கோயில் சாமி சிலைகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முயற்சித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து விரோத செயல்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. சாமி சிலைகள் உடைப்பு, சாமி சிலைகள் திருடு போவது என பல செயல்கள் தொடர்ந்து வருகிறது. "இதனை தடுத்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த வரிசையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தெற்கு தட்சிணாபுரம் என்னும் கிராமத்தில், பிரசித்தி பெற்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலில் அப்பகுதி மக்கள் அன்றாடம் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அக்கோவிலின் தட்சிணாமூர்த்தி சாமி சிலைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முயற்சித்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இச்செய்தி அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் இறங்கினர். அதன் விளைவாக வருவாய்த் துறை அதிகாரிகளின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்து முன்னணியின் முயற்சிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.