'ஜெபம் செய்து உயிர் வர வைப்பேன்' என தாயின் சடலத்தை வீட்டில் வைத்த மதம் மாறிய மருத்துவர்கள்

Update: 2022-11-17 07:08 GMT

பிரார்த்தனை மூலம் உயிர்த்தெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையில் இரண்டு மருத்துவர்கள் தங்கள் தாயின் சடலத்தை வீட்டில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குடும்பம் சமீபத்தில் தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது. அந்த மதத்தை கடுமையாக பின்பற்றுகிறது. அக்கம்பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஓய்வு பெற்ற ஓட்டல் மேலாளரான பாலகிருஷ்ணன், மதுரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மாலதி மற்றும் இரு மருத்துவர் மகன்களுடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. மூத்த மகன் எம்.டி., இளையவன் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். மாலதி இதயக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார்.

இறுதி சடங்கு நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆறுதல் கூற வந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர். எனினும் பாலகிருஷ்ணனும் அவரது மருத்துவர் மகன்களும் எதுவும் செய்யவில்லை. சடலம் 3 நாட்களாக அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சடலத்தை அடக்கம் செய்யும்படி பாலகிருஷ்ணனிடம் போலீசார் கேட்டபோது , ​​தாங்கள் சாமியாருக்காகக் காத்திருப்பதாகக் கூறினார் . சடலத்தை இவ்வளவு நாள் வைத்திருக்கக் கூடாது என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் வலியுறுத்தினர். அவரது சொந்த ஊர் உறவினர்களுக்கு தகவல் அளித்த போலீசார், சடலத்தை மீட்டனர். மாலதி உயிர்த்தெழுப்பப்படுவார் என்ற நம்பிக்கையில் பாலகிருஷ்ணனும் அவரது மருத்துவர் மகன்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாகவும், காவல்துறை அதை உறுதிப்படுத்தியதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

உயிர்த்தெழுதல் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கை பல குடும்பங்களில் அழிவை ஏற்படுத்தியுள்ளது. 

Input From: HinduPost

Similar News