இந்துக்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? மற்ற மதத்திற்கு எதிராக படம் வெளியானால் மட்டும் தடை கேட்கும் அமைப்புகள்!
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் இந்து முன்னணி சார்பில் ஹிந்துக்களின் விரோதிகள் யார்? என்ற சிந்தனைக் கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசினார்.
தமிழகத்தில் லவ் ஜிகாத் பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் அவிநாசியில், வட மாநில நபர்களால் காதல் என்ற பெயரில் கல்லுாரி பெண்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.
லவ் ஜிகாத்தில் ஈடுபடும் வாலிபர்கள் தமிழகப் பெண்களை மயக்கி மூளைச்சலவை செய்து அதன் பின் தீவிரவாத இயக்கங்களுக்கு விற்று விடுகின்றனர்.
மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் இந்து மதத்தையும் ஹிந்து மத கடவுளையும் மிக மோசமாகவும் கேவலமாகவும் சித்தரித்து இருந்தனர்.
அப்போதே நாம் தடுத்திருக்க வேண்டும். இந்துக்களின் உணர்வை எதிர்ப்பாக காட்டியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டதால் இன்று, கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்கள் கருத்துரிமை, மத இழிவு என கூறி தடை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நம் பெண்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இனி திரைப்படங்களாக இருந்தாலும், பொது விஷயமாக இருந்தாலும், இந்து மதத்தையும், இந்து கடவுளையும் கேவலப்படுத்தும் நபர்களை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
இனி நமக்கும் கருத்து சுதந்திரம் தேவைப்படுகிறது என காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
Input From: Dinamalar