கைதுக்கு பயந்து செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்துவிட்டார் - அதிகாரிகள் செல்லும் ஷாக் தகவல்!
செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிறைத்துறை அதிகாரி நீதிமன்ற காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
வரும் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி அல்லியிடம் வலியுறுத்தினர். அமைச்சருக்கான அறுவை சிகிச்சையின் அவசியம் குறித்து திமுக வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து விசாரிக்கவே மருத்துவமனைக்கு வந்ததாக நீதிபதி அல்லி தெரிவித்தார். வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ள இரு தரப்புக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி அறிவுரை வழங்கினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் தனது வாதங்களை முன்வைத்தார்.
அப்போது அவர், செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது என்றும், கைது செய்யப்படுவோம் என தெரிந்தே செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்துவிட்டார் என்றும் வாதிட்டார்.
Input From: DailyThanthi