அரசை விமர்சித்தால் உடனே கைது... இது ஜனநாயக விரோத போக்கு.. அண்ணாமலை கண்டனம்!

Update: 2023-06-17 11:52 GMT
அரசை விமர்சித்தால் உடனே கைது... இது ஜனநாயக விரோத போக்கு.. அண்ணாமலை கண்டனம்!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசுக்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் SG சூர்யா அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.


கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.


அது மட்டும் அல்ல அது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்திலும் இது பற்றி கூறும் பொழுது, "மலக்குழி மரணங்களின் மீது தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய SG சூர்யாவை தண்டிக்க முயற்ச்சி எடுப்பது நியாயமா? உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

Tags:    

Similar News