தி.மு.க அமைச்சர் - எம்.பி மோதலில் கலெக்டரை கீழே தள்ளிவிட்ட விவகாரம்.. கலக்கத்தில் முதல்வர்!
ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக அமைச்சராக இருந்து வரும் ராஜன் கண்ணப்பன் செயல்காரணமாக தற்போது திமுக மேலிடம் கவலையடைந்து இருக்கிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் ஆளுநரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் போன்ற பல்வேறு செயல்களில் சிக்கி இருக்கும் திமுக, இந்த சமயத்தில் அமைச்சரின் இந்த ஒரு செயலால் மேலும் கலக்கமடைந்து இருக்கிறது.
ஒரு அமைச்சர் மற்றும் எம்பி இப்படி பொது வெளியில் சற்று கூறிய கருத்துக்களில் மற்றும் சண்டையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாத இவர்களுடைய சண்டையை தடுக்க முயன்ற மாவட்ட கலெக்டர் அவரையும் கீழே பிடித்து தள்ளிவிட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தனர். விழா ஏற்பாடு நடைபெற்று வந்தது, சற்று நேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார். ஆனால் அவர் வருவதற்கு முன்பு நிகழ்ச்சி தொடங்கிவிட்ட காரணத்தினால் அவர் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த ஒரு சர்ச்சை காரணமாக திமுக மேலிடம் கலக்கத்தில் உள்ளது.
Input & Image courtesy: News