இந்து சமய அறநிலையத்துறையில் பிரேக் தரிசன கட்டண முறை... எதிர்க்கும் இந்து முன்னணி!

Update: 2023-06-20 02:25 GMT

கோவில்களின் நிர்வாகத்தை கண்காணிக்க உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை ஏழை பக்தர்களை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது  என இந்து முன்னணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளது. கோவில்களின் வழிபாடு மற்றும் பூஜை காரியங்களில் தலையீடு செய்யும் போக்கை இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கி இருக்கிறது.

குறிப்பாக கோவில்கள் சிதலமடைவதை கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலை துறை கோவில்களின் மூலம் வருவாய் நீட்ட மட்டும் திட்டமிட்டு செயல்படுகிறது. ஆன்மீக அன்பர்களாலும், அருளாளர்களால் கஷ்டப்பட்டு கட்டப்பட்ட கோவில்களை தங்களுடைய சுய லாபத்திற்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை இதை செயல்படுத்து வருகிறது.


கூட்டம் அதிகமாக வரும் கோவில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பல்வேறு மக்களின் உழைப்பால் தரிசனம் என்ற நோக்கில் அறநிலையத்துறை தனிமனித உரிமைக்கு எதிராக செயல்படுகிறது. தற்போது பிரேக் கட் தரிசன கட்டணம் முறையை அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் வருமானத்தை பெருக்கும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படுகிறது. பணம் இல்லாத ஏழை மக்களின் இலவச தரிசன நேரத்தை குறைத்து பிரேக் கட்டண தரிசனத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குவது போல் இருக்கிறது. ஏழைகளைப் பாதிக்கும் பிரேக் தரிசன நேரத்தை உருவாக்கும் செயல்பாடு சமுதாயத்தின் சமுதாயத்தின் கட்டண தரிசன முறையை கொண்டுவரக் கூடாது என இந்து முன்னணி மாநில செயற்குழு கோரி இருக்கிறது.


தமிழ்நாட்டிற்கு வெளியில் இருக்கும் திருப்பதி போன்ற கோவில்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அங்குள்ள பக்தர்களுக்கு பயன் படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பக்தர்களுக்கு அதுபோன்ற எந்த ஒரு வசதியும் செய்து தரப்படுவது இல்லை. மாறாக கோவில்களின் மூலம் வருமானத்தை மட்டுமே இந்து சமய அறநிலையத் துறை எடுத்துக் கொள்வதாக இந்து முன்னணி குற்றம் சாட்டி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News