கோயிலில் யானைகளை வளர்க்க கூடாது உத்தரவிற்கு இடை கால தடை.. இந்து முன்னணி வரவேற்பு..

கோயில்களில் யானைகளை வளர்க்க வாங்க கூடாது என்ற உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் இடை கால தடை விதித்துள்ளது.

Update: 2023-06-22 02:51 GMT

கோவில்களில் யானைகளை வளர்ப்பதற்கு வாங்கி அவற்றை கொடுமைப் படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. குறிப்பாக கோவில்களில் யானைகளை வளர்ப்பதற்காக வாங்க கூடாது என்று உத்தரவிற்கு தற்பொழுது இடைக்கால தடையை மதுரை உயர்நீதிமன்றம் விதித்து இருக்கிறது. மேலும் இதற்கு இந்து முன்னணி தன்னுடைய வரவேற்பை தெரிவித்து இருக்கிறது. கோயில்களில் யானைகளை வளர்க்க வாங்க கூடாது என்ற உத்தரவிற்கு மதுரை உயர் நீதிமன்றம் இடை கால தடை விதித்துள்ளது இதனை இந்துமுன்னணி வரவேற்கிறது.


கோயில் நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்தப்படுவது பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஆகும். நமது நாட்டில் பாரம்பரியமாக இந்துக்கள் கடைபிடித்து வரும் பழக்கவழக்கங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னிய நாடுகளின் தூண்டுதல் காரணமாக பீட்டா உள்ளிட்ட அமைப்புக்கள் விலங்கு நல ஆர்வலர்கள் என்ற பெயரில் சதி செய்வதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.


அதே நேரத்தில் வியாபார நோக்கத்தில் தனி நபர்கள் யானைகள் வளர்ப்பதற்கு உரிய வழிமுறைகளை வரையறுக்க வேண்டும். கோவில்களில் யானைகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது நம்முடைய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருவதாகவும் இந்து முன்னணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News