கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திராவிட மாடல்.. இந்து முன்னணி ஆவேசம்!

திராவிட மாடலால் கைது செய்யப்பட்டு தற்போது வெளியில் வந்த பா.ஜ.க மாநில செயலாளர் SG. சூர்யாவை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர்.

Update: 2023-06-24 05:02 GMT

தங்களது ஆட்சியில் முழுமையாக தமிழகத்தில் கருத்து சுதந்திரம் தரப்படுவதாக திமுக தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆளும் திமுகவிற்கு எதிராக யாரேனும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தல் அவர்களை உடனடியாக கைது செய்தும், சிறையில் அடைத்தும் நடவடிக்கையை தொடர்ச்சியாக திராவிட மாடல் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட பாஜக மாநில செயலாளராக இருந்து வரும் SG சூர்யா அவர்கள் தூய்மை பணியாளர் ஒருவரின் இறப்பிற்கு பதில் சொல்லுங்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.



உண்மையில் தூய்மை பணியாளர் இறப்பிற்கு யாரும் தற்போது வரை பதில் சொல்லவில்லை. ஆனால் அதற்காக கருத்து தெரிவித்த நபரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவர் மூன்று நாட்களிலேயே சிறையில் இருந்து தற்போது வெளியில் வந்து இருக்கிறார். திமுகவிற்கு எதிராக யாராவது கருத்து கூறினால் உடனே அவர்களை சிறையில் வைப்பது அநாகரீகம் என்று இந்து முன்னணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


அதுமட்டுமில்லாத நேற்று கூட, கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்த பாரதிய ஜனதா கட்சி மாநிலச் செயலாளர் S.G.சூர்யா அவர்களை இந்து முன்னணி மாநில தலைவர்  காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து விசாரித்தார். இது பற்றி இந்து முன்னணியின் சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிடும் பொழுது கருத்து சுதந்திரத்தை திராவிட மாடல் குழி தோண்டி புதைத்து கொண்டு இருக்கிறது என்று இந்து முன்னணி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது.  

Input & Image courtesy: News

Tags:    

Similar News