வள்ளலாரை பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்து முன்னணியின் காரசார பதிவு!
வள்ளலார் கருத்துக்கள் சனாதன தர்மத்தின் உச்சம் என தமிழக கவர்னர் ஆர். என். ரவி அவர்கள் பேசியதற்கு இந்துமுன்னணி பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறது அது மட்டும் இல்லாது கவர்னருக்கு எதிராக கருத்துக்களை கூறியவர்களையும் சரமாரியாக இந்து முன்னணி கேள்வி எழுப்பி இருக்கிறது. அது பற்றி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பொழுது,"அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வரை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். உண்மையில் எதிர்ப்பு கருத்து தெரிவிப்பவர்கள் நோக்கம் வள்ளலாரை போற்றுவது இல்லை, கவர்னரை தூற்றுவதும் இந்து தர்மத்தை பழிப்பதும். மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடத்தியவர்கள் ஜீவகாருண்மே தவ வாழ்வு என்ற வள்ளலாரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? சனாதனம் என்றால் ஆதியும் அந்தமும் இல்லாதது, என்றும் நிலைத்து எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
இந்து தர்மமான சனாதன தர்மம் ஏற்றுக் கொள்கிறது. வள்ளலார் வாழ்க்கை அற்புதமான ஆன்மிக செய்தி. அவரது வாழ்வில் சென்னை திருவொற்றியூர் வடிவுடையான் அவரது பசியாற்றி அற்புத நிகழ்வும், அங்கு வாழ்ந்த சித்தர் இவர்தான் மனிதர் என்று போற்றியதும் வள்ளலார் பெருமைக்கு எடுத்துக் காட்டு ஆகும். வள்ளலார் கையொப்பமிடும்போது திருச்சிற்றம்பலம் என எழுதியே கையொப்பம் இட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் முஸ்லிம் அமைப்பினர் வள்ளலாரை களங்கப்படுத்தி துண்டறிக்கை இந்துக்களிடம் கொடுத்தபோது, அதனை தட்டி கேட்டது இந்து முன்னணி. ஆனால் இந்த திராவிட அரசு நியாயம் கேட்ட 9 இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போட்டது. ஆனால் கவர்னர் வள்ளலாரை பெருமைப்படுத்தினால் பொங்கி எழுகிறார்கள். இதுதான் இரட்டை வேடம்" என்று இந்து முன்னணி குற்றம் சாட்டி இருக்கிறது.
Input & Image courtesy: News