காசு கொடுத்து தரிசனம் செய்ய கடவுள் என்ன காட்சி பொருளா? இந்து முன்னணியின் காரசார பதிவு...

Update: 2023-07-05 07:31 GMT

தமிழகத்தில் உள்ள கோவில்கள் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. மேலும் இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களில் கட்டணம் தரிசனம் தற்போது வரை இருந்து தான் வருகிறது. பக்தர்கள் கடவுளை தரிசனம் செய்ய இலவச தரிசனம் இருந்தாலும் நீண்ட நேரம் அவர்கள் காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. மேலும் இது தொடர்பாக இன்று முன்னணி சார்பில் தற்பொழுது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் காரசார பதிவு ஒன்று பதிவிடப்பட்டு இருக்கிறது.



இது பற்றி இந்து முன்னணி கூறும் பொழுது, "காசு கொடுத்து தரிசனம் செய்ய கடவுள் என்ன காட்சி பொருளா? என இந்து முன்னணியின் தொடர் போராட்டங்களால் திருவண்ணாமலை ஆலயத்தில் கடவுளை தரிசிக்க கட்டணம் வசூலிக்க கூடாது என அரசு உத்தரவிட்டது. நீதிமன்றங்களும் பலமுறை கட்டண தரிசனத்திற்கு எதிராய் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் திருவண்ணாமலை கோவிலில் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் கையாலாகதனத்தை தான் காட்டியுளது. ஆலயங்களில் இந்து விரோத திமுகவினரை நிர்வாகிகளாக போட்டதால் இந்த தரிசன கட்டண கொள்ளை நடந்துள்ளது.


அரசின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகளும் இல்லை, ஆளுங்கட்சி பிரமுகர்களும் 500 கோடி கொடுத்து வாங்கிய தமிழக பிச்சை அரசை மதிப்பதில்லை. திறனற்ற திமுக அரசுக்கு தமிழகத்தில் அரசு அதிகாரிகள், கட்சிக்காரர்களை கட்டுப்பாட்டில் வைத்து ஆளத்தெரியவில்லை, இதனால் இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை" என இந்து முன்னணி சார்பில் ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News