இந்து சமய அறநிலைத்துறையில் இந்த ஒரு செயல்பாடு... இந்து முன்னணி கண்டனம்...
இந்து முன்னணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்கள். இது பற்றி அவர்கள் கூறும் போது, "இந்து சமய அறநிலைத்துறையின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் பேசியுள்ளார். சமீப காலத்தில் டாஸ்மாக் வருமானத்தை எடுத்து அரசு செலவிடுவது போல இந்து சமய அறநிலைத்துறை கோவிலின் பணத்தை அரசுக்கு தாரை வார்ப்பது அனைவருக்கும் தெரிந்ததே. முழுக்க முழுக்க வருமானத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, பல கோவில்கள் விளக்கு எரியாமலும், வழிபாடு இல்லாமல் சீரழிந்து இருப்பது அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் நன்கு அறிவார்கள்.
வருமானம் அதிகமாக வரக்கூடிய கோயிலை மட்டும் அரசு அதிகாரிகளை போட்டு அதிலிருந்து வருமானத்தை ஈட்டுவதை மட்டுமே தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை செய்து வருகிறது. இந்து சமய அறநிலைத்துறையின் செயல்பாடு பற்றி தெரிய வேண்டும் என்றால் பழனியில் இஸ்லாமியர்களின் வேண்டுகோளை கேட்டுக்கொண்டு கோவிலில் வைத்துள்ள "இந்து அல்லாதவர் உள்ளே செல்ல அனுமதி இல்லை" என்ற பெயர் பலகையை அகற்றி உள்ளார்கள்.
இவர்கள் எப்படி சிறப்பாக செயல்பட்டு இந்து பக்தர்களுக்கு நல்ல ஏற்பாடுகளை செய்வார்கள் என்று நம்ப முடியும். முதல்வர் கூறுவது இது போன்று மக்களை ஏமாற்றி பொய்யான அறிக்கைகளின் மூலம் திசை திருப்பி இந்து மக்களை ஏமாற்றும் திராவிட முன்னேற்றக் கழக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது" என கூறி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News