அம்மணி அம்மாள் மடம் ஆக்கிரமிப்பு.. நீதிமன்றத்தின் தீர்ப்பு... இந்து முன்னணி வரவேற்பு...

Update: 2023-07-15 04:58 GMT

தொன்மையான அம்மணி அம்மாள் மடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து முன்னணி தன்னுடைய கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அது தொடர்பான வழக்கில் தற்போது வெளியான நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்து முன்னணி ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பகிரப்பட்டு இருக்கிறது. இது பற்றி இந்து முன்னணியினர் தரப்பில் கூறும் பொழுது, "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் வடக்கு கோபுரம் அருகே அமைந்திருந்த 400 ஆண்டுகள் தொன்மையான அம்மணி அம்மாள் மடம் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற போர்வையில் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்து சமய அறநிலையத் துறையால் இடித்து அழிக்கபட்டது. தமிழக அரசுதான் தன் கட்டுபாட்டில் உள்ள அம்மணி அம்மாள் என்ற அருளாளர் வாழ்ந்த மடத்தை பக்தர்களின் சிரமம் போக்கி வந்த 400 ஆண்டு பழமையான மடத்தை ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற போர்வையில் இடித்து அழித்துள்ளது.



இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்து கள ஆய்வு செய்து தீர விசாரித்து மடத்தை இடித்த அறநிலையத்துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், பழமை மாறாமல் மீண்டும் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அறநிலையத்துறையின் தலையில் வலுவாக குட்டியுள்ளது. இனியாவது இந்து சமய அறநிலையத்துறை கோயில் மற்றும் புராதன சின்னங்களின் தொன்மை கலைநுணுக்கம் போன்ற விஷயத்தில் விழிப்புடன் செயல்படவேண்டும்.


அதே நேரத்தில் இனி ஒரு அதிகாரியும் புராதன சின்னங்களுக்கு சிறு சேதாரத்தைகூட செய்ய துணியாத அளவுக்கு உரிய சட்டங்களும் ஏற்கனவே அம்மணி அம்மாள் மடம் இடிக்க காரணமான அறநிலைய துறை அலுவலர்கள் மீது பொது சொத்தை புராதன சின்னதை அழித்த குற்றத்துக்காக உரிய வழக்கு பதிவதோடு உடனடியாக அவர்களை பணி நீக்கம் செய்தும் தொன்மையான கட்டிடங்கள் இடிக்கபடுவதை கண்டு கண்மூடித்தனமாக காவல்துறை மெய்வாய் பொத்தி இருப்பதை தவிர்க்க உரிய உத்தரவும் பிறப்பிக்க வேண்டும்" என்று இந்து முன்னணி சார்பில் கேட்டு கொள்ள பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News