இந்து சமய அறநிலையத்துறை அலுவலக முற்றுகை போராட்டம்.. இந்து முன்னணி அறிவிப்பு..
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்வேறு கோவில்கள் நிலங்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படி மீட்கப்படும் நிலங்களை கோவில்களின் நன்மைக்காக மட்டும் பயன்படுத்தாமல் அரசு தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மேலும் இதற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக தொடங்கப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றில், கோவில் நிலங்களை வேறு எந்த துறைகளுக்கும் வழங்கக் கூடாது என்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. குறிப்பாக கோவில் ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக விவசாயம் செய்து வருவதற்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவில் பெயரில் உள்ள நஞ்சை, புஞ்சை போன்ற நிலங்கள் இருந்தால் அவற்றை விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கோவிலுக்கு செலுத்த வேண்டும்.
அந்த வகையில் அவற்றுக்கு எதிராக அறநிலையத்துறை செயல் படுவதாகவும் இந்து முன்னணி குற்றம் சாட்டை இருக்கிறது. இது தொடர்பாக போராட்டம் ஒன்று நடத்த இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், "அறநிலையத்துறையே, ஏழை இந்து விவசாயிகளை வஞ்சிக்காதே! மாபெரும் முற்றுகை போராட்டம். தஞ்சை பேராவூரணி கழனிவாசல் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலின் பல ஏக்கர் புஞ்சை நிலத்தை, ஏழை இந்து விவசாயிகளை வஞ்சித்து, தனிநபருக்கு வழங்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Input & Image courtesy:News