ஒரே மாதிரியான பாடத்திட்டம்.. திரும்ப பெற வேண்டும் - வலுக்கும் போராட்டம்..
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வெளியிட்ட பிறகு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழக கல்வித்துறையில் பெரும் சர்ச்சை நீடித்து வந்தது. குறிப்பாக தமிழக அரசின் இந்த ஒரு முடிவை பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இந்தக் குழப்ப நிலையை தமிழக அரசு ஏற்படுத்துவது தமிழகத்தில் உயர்கல்வியை மிகவும் பாதிக்கும் என்று கல்வியாளர்கள் குரல் எழுப்புகிறார்கள்.
பல்கலைக் கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் உருவாக்கும் பாடத்திட்டங்களில் குறைகள் இருக்குமானால், அவை குறித்து புகார்கள் இருக்குமானால், அவை பற்றி ஆய்வு செய்து அவற்றை எவ்வாறு போக்குவது என்பது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் உரையாடல்களை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து இம்மாதிரி திட்டத்தை திணிப்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வித் தரத்தை உறுதியாக பாதிக்கும்.
குறிப்பாக இந்த பொது பாடத்திட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களுடைய சிலபஸை மீண்டும் புதிதாக புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு காலம் அவகாசம் வேண்டி இருக்கும் ஒரு சூழ்நிலையில் ஏற்கனவே முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில் இவற்றை திணிக்கும் விதமாக தமிழக அரசின் முடிவு அமைந்து இருக்கிறது என்று குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News