அண்ணாமலையின் ஒரு ட்விட்டுக்கு இவ்வளவு பவரா.. அமித்ஷாவின் அதிரடி பேச்சு..
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது மாபெரும் பாத யாத்திரையை தொடங்கினார். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக அமித்ஷா அவர்கள் சிறப்பு விமானம் மூலமாக டெல்லியில் இருந்து மதுரை வந்து இறங்கி பிறகு கார் மூலமாக ராமநாதபுரத்திற்கு நேற்று வந்தார்.
நேற்று மாலை ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா அண்ணாமலையின் பாத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தி.மு.கவையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். குறிப்பாக அண்ணாமலை ஒரு ட்விட் போட்டாலே திமுக பயப்படுவதாகவும் அவர் பதிவிட்டு இருந்தார். நல்லபடியாக என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நேற்று அமித்ஷா அவர்கள் தொடங்கி வைத்து இருந்தார். இதற்கிடையே இன்று அதிகாலை 5.40 மணியளவில் மத்திய அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் அதிகாலையில் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதிகாலை நேரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது விடுதியில் இருந்து கோயிலுக்கு போலீஸ் அழைத்து வந்தனர். ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் அமித் ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது அமித் ஷா உடன் மத்திய அமைச்சர் எல் முருகன், முன்னாள் அமைச்சர் பொன் ராதகிருஷண்ன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
Input & Image courtesy: News