ராமநாதபுரம் யாத்திரைக்கு பிறகு களத்தில் இறங்கிய பா.ஜ.க.. பாராட்டும் பொதுமக்கள்.. ஏன்?
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மத்திய மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
நடைபயண துவக்க விழாவிற்காக புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் வடிவில் மேடை அமைக்கப் பட்டிருந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, 31ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை செல்கிறார். இப்படி யாத்திரை செல்லும் பொழுது வரும் வழிகளில் எல்லாம் பாஜகவிற்கு மிகுந்த ஆதரவு மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலான யாத்திரை பயணம் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் தொடங்கிய யாத்திரை பயணம் நிறைவில் பாஜக சிறப்பான சம்பவம் ஒன்றே செய்து இருக்கிறது. பாஜக சார்பில் பாஜக தொண்டர்கள் நேரடியாக களத்தில் இறங்கி அண்ணாமலை அவர்கள் கூட்டத்தை நிறைவு செய்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்த பிறகு, பாஜகவினர் பத்துக்கும் மேற்பட்டோர் கூட்டம் நடந்த இடத்தில் கிடந்த தண்ணீர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளை, மேலும் அங்கிருந்து சில குப்பைகளை அகற்றிய வீடியோக்கள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Input & Image courtesy: News