ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் சுவர் இடிந்த சம்பவம்.. அஜாக்கிரதையாக இருந்த அறநிலையத்துறை..

Update: 2023-08-09 04:11 GMT

108 வைஷ்ணவ தளங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது தான். ஸ்ரீரங்கம் குறிப்பாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவில் சுமார் 7 திருசுற்றுகள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரம், கீழச்சித்திரை வீதியையும் கீழ வஞ்சனான் வீதியையும் இணைக்கும் சாலையில் உள்ளது. இந்த கோபுரம் எட்டு நிலைகளைக் கொண்டது. இந்த கோபுரத்தின் கீழ் இருந்து ஒன்று மற்றும் இரண்டாவது நிலைகளில் உள்ள பக்க சுவற்றில் ஏற்கனவே சிறிய விரிசல் ஏற்பட்டது.


இதனால் கோபுரத்திற்கு செய்த ஏற்படலாம் மேலும் இடிந்து விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒரு கட்டைகளை மட்டுமே நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். கடந்த 25 ஆம் தேதி கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை பக்க சுவற்றில் மேற்புற சிமெண்ட் பெயர்ந்து விழுந்தது. சிறிய பாகங்கள் கீழே விழுந்தன, இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று கிழக்கு கோபுரத்தின் முதல் நிலையின் பக்க சுவர் இடிந்து விழுந்தது.


இந்த ஒரு சம்பவம் நள்ளிரவில் ஏற்பட்டதன் காரணமாக எந்த ஒரு சம்பாத விதமும் ஏற்படவில்லை. ஆனால் இது காலையில் நிகழ்ந்திருந்தால் பக்தர்களின் உயிர் பாதிக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அறநிலையத்துறை ஏன் இவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டு இருக்கிறது. உடனே ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? என்று அங்கு இருக்கும் பக்தர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News