ஆவின் நிறுவனத்தின் மீது மற்றொரு குற்றச்சாட்டு.. பாதிக்கு பாதி பாலில் தண்ணீர் கலப்பதா..

Update: 2023-08-20 05:17 GMT

தமிழக அரசின் பொது நிறுவனமான ஆவின் நிறுவனம் தற்போது நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. ஆவினுக்கு போட்டியாக அமுல் நிறுவனம் இங்கு வரக்கூடாது என்று பல்வேறு சர்ச்சைகளும் தமிழகத்தில் கடந்த காலங்களில் நிகழ்ந்தன. ஆவின் நிறுவனம் தற்போது கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்து இருந்தாலும் பெரும்பாலும் மக்கள் ஆவினிடமிருந்து பால் வாங்குவதை நிறுத்தி கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடும் மற்றும் சில பால் முகவர்கள் மோசடிகளும் நடந்து வருகிறது.


அந்த வகையில் தற்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சை நடந்து இருக்கிறது. அதிக அளவில் பாலில் தண்ணீர் கலப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. மதுரை ஆவின் பி.எம்.சி.களில் நடக்கும் கலப்பட பிரச்னைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதுரையில் ஆவின் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட அளவு தற்போது குறைக்கப்பட்டு கடும் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பால் பாக்கெட் விநியோகம் செய்தல் தாமதம் நிகழ்கிறது.


பி.எம்.சி.,களில் பால் ஊற்றும்போது பாதி தண்ணீர் கலப்படம் செய்து, பாலின் தரம், விலை பாதித்து விடுகிறது. இதனால் ஒரு லிட்டருக்கு ரூ.3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தனியாருக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News