கோவில் நிலத்தை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதா.. இந்து முன்னணி கேள்வி..

Update: 2023-09-02 02:40 GMT

தமிழகம் அதிக அளவில் இந்து கோயில்கள் இருந்து வரும் புகழ்பெற்ற மாநிலமாக இந்தியாவில் விளங்குகிறது. நம்முடைய முன்னோர்கள் அனைவரும் அதிக அளவில் தங்களுடைய சொத்துக்களை கோவில் பெயரில் தானமாக கொடுத்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தில் அவர்கள் அப்போது விட்டு சென்ற நிலங்கள் தற்பொழுது பல ஆக்கிரமிப்பில் தான் இருக்கிறது. அது மட்டும் கிடையாது அவற்றை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாகவும் ஒரு குற்றச்சாட்டில் எழுந்து இருக்கிறது.


இது பற்றி இந்து முன்னணி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிடும்போது, "நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பல்கலைக் கழகத்திற்காக கோயில் நிலத்தை அரசு எடுப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதுபோன்று பொது பயன்பாட்டுக்கு கோவில் நிலத்தை மட்டும் எடுப்பது இந்து விரோதமாகும். நீதிமன்றம் ஒரு உத்தரவில் கோவில் நிலத்தை கோவில் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.


இந்த நாட்டின் உச்சபட்ச அதிகாரமான நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றுவது கிடையாது. சட்டத்தை மீறும் அரசு தமிழக அரசு ஆகும். எனவே நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் நிலத்தை கோவில் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்துமாறு விவசாயி பல்கலைக்கழகத்திற்கு வேறு இடத்தை அரசு புறம்போக்கு இடத்தை பயன்படுத்துமாறு இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News