தூத்துக்குடியில் அரசு நிலத்தில் சர்ச்: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் மடத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுவரும் சர்ச் கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவில் கூறியுள்ளது.

Update: 2021-12-15 08:50 GMT

தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் மடத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுவரும் சர்ச் கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவில் கூறியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராஜவேல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் : நான் இந்து மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளேன். தூத்துக்குடி மாவட்டம், மீளிவிட்டான், மடத்தூரில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் அரசு நிலம் அமைந்துள்ளது. அங்கு எவ்வித அனுமதியும் பெறாமல் சி.எஸ்.ஐ. சர்ச் கட்டுமானம் துவங்கியுள்ளது. அதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அது குறித்து புகாராகவும் அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

இதற்காக சமாதான கூட்டமும் நடைபெற்றது. அப்போது கட்டுமானத்தை நடத்த மாட்டோம் என்று சர்ச் நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். ஆனால் அதையும் மீறி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். மேலும், கட்டுமானம் மற்றும் சர்ச் கட்டடத்தை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி உடனடியாக சர்ச் அகற்றவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர், தாசில்தார், சிப்காட் போலீஸ் உள்ளிட்டோக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு 4 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News