கொங்கு மண்டலத்தில் அழியும் தென்னை நார் தொழில் ! ஒரு லட்சம் பெண்கள் வேலையிழக்கும் அபாயம்!

கொங்கு மண்டலத்தில் தென்னை நார் தொழில்களை, வெள்ளை வகையில் இருந்து, ஆரஞ்சு வகையில் சேர்த்து 15 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஒரு லட்சம் பேர் வேலை இழக்கின்ற அவல நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Update: 2021-12-18 08:01 GMT

கொங்கு மண்டலத்தில் தென்னை நார் தொழில்களை, வெள்ளை வகையில் இருந்து, ஆரஞ்சு வகையில் சேர்த்து 15 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஒரு லட்சம் பேர் வேலை இழக்கின்ற அவல நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  

கொங்கு மண்டலம் என்றாலே தென்னந்தோப்புகள் அதிகளவு இருக்கும். தேங்காய் மற்றும் இளநீர் உள்ளிட்டவைகளை விவசாயிகள் ஏற்றுமதி செய்து பல லடசம் ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். அது மட்டுமின்றி தேங்காய் நாரை நம்பி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது தென்னை சார்ந்த தொழில்களை, வெள்ளை வகையில் இருந்து, ஆரஞ்சு வகையில் சேர்த்து 15 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தென்னை நார் தொழில் முடங்குமென உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தென்னை நார் தொழிற்சாலைகளை, வெள்ளை வரிசையில் இருந்து மாற்றி, அதிக மாசு என குறிப்பிடும் 'ஆரஞ்சு' வரிசையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தியுள்ளது. இதற்கு நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்திய கயிறு வாரிய உறுப்பினர் கவுதமன் கூறும்போது, தமிழகத்தை சேர்த்து 14 மாநிலங்களில், 21 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 8200 தொழிற்சாலைகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் வெள்ளை வரிசையில் இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஆரஞ்சு வரிசையில் திமுக அரசு சேர்த்துள்ளது. தென்னை நார் காயர் பித் தயாரிப்பில் எவ்வித ரசாயனமும் பயன்படுத்துவதில்லை. இந்த தொழிலை ஆரஞ்சு வரிசையில் சேர்த்துள்ளது வருத்தத்துக்குறியது. இதனால், தென்னை நார் சார்ந்த தொழில் அடியோடு அழியும். முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த உத்தரவை திரும்பபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source,Image Courtesy: Twiter


Tags:    

Similar News