"சிறுமி இறப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்". இந்து முன்னணி மாநில தலைவர் மாணவிக்கு நீதி வேண்டி அறிக்கை!
"மாணவி இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்". என்று இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரர் சுப்பிரமணியம் அவர்கள் மாணவிக்கு நீதி வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்திய அளவில் தற்போது வரை டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
கட்டாய மத மாற்றத்திற்கு வற்புறுத்திய பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து, மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணி 19.1.2022 அன்றே தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவிக்கு நீதி வேண்டி மனு அளித்துள்ளது.
இந்நிலையில் அதே நாளில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் அவர்கள் மாணவிக்கு நீதி கேட்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் " மாணவி இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பள்ளி விடுதி மாணவர்கள் அனைவரையும் முழு விசாரணைக்கு ஆட்படுத்தினால் மதமாற்றக் கொடுமையின் முழு விவரங்கள் தெரியவரும்" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழக காவல் துறை மாணவி இறப்பு விவகாரத்தில் நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவுள்ளது.