தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதா... அண்ணாமலை கொடுத்த ஷாக்...
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய அறிக்கையில், தமிழுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது போல் தெரிகிறது என்று என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்தி வரும் தமிழக முதல்வர் பிரதமர் மோடி கொடுக்காத வாக்குறுதிகளை கொடுத்ததாக மக்களை நம்ப பக்கம் முயற்சி செய்து வருகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக அரசு தேர்தலில் கொடுக்காத வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் அவர்கள் பேசி வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தை போது பிரதமர் கலந்து கொண்டு ஒரு பிரச்சாரத்தில் இன்னும் இருக்கும் நபர்கள் வெளிநாடுகளில் கருப்பு பணங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். இங்கு ஊழல் செய்யும் ஊழல்வாதிகள் வெளிநாட்டில் வைத்திருக்கும் பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்று கூறினார். ஆனால் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் சொல்லவில்லை. திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? குறிப்பாக தன்னுடைய உறவினர்கள் முறைகேடாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளில் தொடர்பில் இருக்கிறார்களோ என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் அரசு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது, நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News