ஈரோடு மத பிரசாரத்தில் ஈடுபட்ட 15 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த இந்து முன்னணி!

Update: 2022-07-14 13:05 GMT

ஈரோட்டில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட 15 பேர் கொண்டு கும்பலை பிடித்து இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஈரோடு நகரில் சூளை, ஈ.பி.பி. நகர் மற்றும் ஜனதா காலனியில் நேற்று மாலை வேனில் வந்த 15 பேர் கொண்ட குழுவினர் பள்ளி மாணவ, மாணவியர், வீடுகள், கடைகள் நடத்தும் வணிகர்கள், நடந்து செல்வரிடமும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு புத்தகங்களை வழங்கினர்.

கிறிஸ்தவ மதம்தான் உயர்வானது என்று பெருமை பேசி பிரசாரம் செய்து வந்தனர். அப்போது கடை வைத்துள்ள இந்து முன்னணி பிரமுகர் சவுந்தர்ராஜன் 30, கடையிலும் புத்தகத்தை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த மாவட்ட செயலாளர் சங்கர், மாநகர பொது செயலாளர் சக்தி முருகேஷ் உள்ளிட்ட 20க்கும் அதிகமானோர்கள் கூடினர்.

இதன் பின்னர் மதபிரசாரத்தில் ஈடுபட்ட 15 பேர் கொண்ட கிறிஸ்தவ கும்பலை பிடித்து வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் 15 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளனர். சட்ட விரோதமாக மத பிரசாரத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

Source: Dinamalar

Image Courtesy: Indian Rail Info

Tags:    

Similar News