விநாயகர் கோயிலுடன் 20 ஏக்கர் நிலத்தை காணோம்: ஆட்சியரிடம் இந்து பரிவார் கூட்டமைப்பு பரபரப்பான புகார்!
திருப்பூரில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன விநாயகர் கோயிலை உடனடியாக கண்டுப்பிடித்து தர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் இந்து பரிவார் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட செல்வ விநாயகர் கோயில் ஒன்று இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அந்த கோயில் காணாமல் போயுள்ளது. கோயில் இருந்த இடம் தற்போது குப்டை கொட்டுகின்ற இடமாகவும் மாற்றியுள்ளனர்.
அங்கு வசித்த மக்கள் விநாயகர் கோயில் இருந்ததாகவும், அதன் பின்னர் கோயில் நாளடைவில் சிதிலமடைந்து இடிந்து விட்டதாகவும் சொல்கின்றனர். மேலும், கோயிலுக்கு சொந்தமாக பல கோடி மதிப்பிலான இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோயில் இருந்த இடம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே கோயிலை மீண்டும் சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Source: Dinamalar
Image Courtesy: Vizag Tourism