மதிய உணவு திட்டத்தில் அழுகிய நிலையில் 2,115 முட்டைகள்.. நடவடிக்கை எடுக்குமா தமிழக பள்ளி கல்வித்துறை?
ஈரோடு மாவட்டம், கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி வட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட 2,115 முட்டைகள், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிமாறுவதற்காக வேகவைத்த போது அழுகிய நிலையில் காணப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரந்தோறும் 92,000 முட்டைகள் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. மொடக்குறிச்சி தாலுகாவில் 126 பள்ளிகளும், கொடுமுடி தாலுகாவில் 90 பள்ளிகளும் வாரந்தோறும் முட்டை பெறுகின்றன.
இதில் பல பள்ளிகளில் உள்ள மதிய உணவு மையங்களில் உள்ள சமையலர்கள் மற்றும் அமைப்பாளர்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முட்டைகள் அழுகியதை கவனித்தனர். பள்ளி தலைமையாசிரியர்களிடம் பிரச்னையை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படாததால், கலெக்டர் அலுவலகத்தில் மதிய உணவு திட்ட அலுவலர்கள் உஷார்படுத்தப்பட்டனர்.
மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள 27 பள்ளிகளில் 1,348 முட்டைகளும், கொடுமுடி தாலுகாவில் 13 பள்ளிகளில் 767 முட்டைகளும் அழுகியதாக தி இந்து செய்தியை வெளியிட்டு இருக்கிறது. மூன்று நாட்களுக்கு குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அனைத்து பள்ளிகளும் நவம்பர் 1 ஆம் தேதி முட்டைகளைப் பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
Input & Image courtesy: The Hindu