உக்ரைனில் இருந்து 219 மாணவர்களை அழைத்து வந்த மத்திய அரசின் சாதனை மிகப்பெரியது!

Update: 2022-02-26 12:06 GMT

உக்ரைனில் இருந்து முதற்கட்டமாக 219 மாணவர்களை தாயகம் அழைத்து வந்த மத்திய அரசின் சாதனை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உழைப்பு மிகப்பெரியது என்று இந்து முன்னணி கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கித்தவித்த 219 மாணவர்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளது. உக்ரைனில் கடந்த மூன்றாவது நாளாக ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் உயிரை கையில் பிடித்தபடி அங்கும், இங்குமாக ஓடுவதை காண முடிகிறது.

இதற்கு இடையில் இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு பிரதமர் மோடி இரவு, பகலாக பணியாற்றி வருகின்றார். ரஷ்ய அதிபர் மற்றும் அங்குள்ள தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகின்றார். இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பலனாக தற்போது 219 மாணவர்களை பத்திரமாக மீட்டு விமானம் மூலமாக மத்திய அரசு தாயகம் அழைத்து வந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியர்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாய் நிற்கின்ற மத்திய அரசிற்கும்; அபாயத்திலும் அல்லும், பகலும் பணியாற்றுகின்ற வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். இவ்வாறு ட்விட்டர் பதிவில் இந்து முன்னணி கூறியுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News