கன்னியாகுமரி: அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் கோட்டாறு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 21) வழக்கம் போல மாணவிகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. அதனை சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது.
இதனையடுத்து மாணவிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் அமைச்சர் தங்கராஜ் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Polimer