அறிவிப்பின்றி தண்ணீர் திறப்பு: கொள்ளிடத்தில் மூழ்கி 3 வேத பாடசாலை சிறுவர்கள் பலி!

Update: 2023-05-18 00:45 GMT

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆச்சார்யா ஸ்ரீமாந் பட்டர் குருகுலம் வேதபாடசாலை உள்ளது.

இங்கு, ஈரோடு மாவட்டம் வளரசம்பட்டி கோபாலகிருஷ்ணன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விஷ்ணுபிரசாத், ஹரிபிரசாத், ஆந்திரா மாநிலம் குண்டூர் அபிராம் ஆகியோர் கோடை கால பயிற்சி வகுப்பில் படித்தனர்.

இவர்கள் அதிகாலை 5:45 மணிக்கு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ளே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அருகில் இருந்தவர்கள் கோபாலகிருஷ்ணணை காப்பாற்றினர். தேடியதில் நீரில் மூழ்கிய விஷ்ணுபிரசாத்தை சடலமாக மீட்டனர். மற்ற இருவரையும் மீட்க முடியவில்லை.

ஸ்ரீரங்கம் போலீசார் தீயணைப்பு படையினர் அபிராம் ஹரிபிரசாத் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஹரிபிரசாத் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து நடந்த தேடுதலில் அபிராம் உடல் மீட்கப்பட்டது.

கொள்ளிடத்தில் எப்போது தண்ணீர் திறந்தாலும், மாவட்ட நிர்வாகம் மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படும்.

ஆனால் 10 நாட்களுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்த போது, முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடவில்லை.

கொள்ளிடத்தில் அதிக தண்ணீர் வருவது தெரியாமல் குளிக்கச் சென்ற மூன்று வேதபாடசாலை மாணவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவால் இறந்தனர்.

Input From: dailythanthi 

Similar News