செந்தில் பாலாஜியின் மனு விசாரணை.. 3வது நீதிபதி நியமனம்.. கூறியது என்ன?

Update: 2023-07-07 07:17 GMT

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் பிறப்பித்து இருந்தார்கள். இப்போது நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். அதாவது நீதிபதி நிஷா பானு அமலாக்கத்துறையின் செந்தில் பாலாஜி கைது செய்தது சட்டவிரோதம், அவரை உடனடியை கோர்ட் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர்கள் அவர் 10 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ஆட்கொணர்வ மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எனவே இரு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பை கொடுத்த காரணத்தினால் இது எடுத்து இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க உத்தரவிட தலைமை நீதிபதிக்கு இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்தார்கள்.


அதன் அடிப்படையில் தலைமை நீதிபதி இந்த ஒரு வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தற்பொழுது இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருக்கிறது. சனிக்கிழமை இந்த வழக்கின் விசாரணை தொடரும் என்று நீதிபதி கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News