கபாலீசுவரர் கோயிலில் சிலை மாயமான வழக்கு: 6 வாரங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலை காணாமல் போனது. இது குறித்த வழக்கின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை 6 வார காலத்திற்குள் முடிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-02-02 05:19 GMT

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலை காணாமல் போனது. இது குறித்த வழக்கின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை 6 வார காலத்திற்குள் முடிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் புன்னை வனநாதர் சந்நிதியில் மயில் வடிவிலான அம்பாள் தனது அலகில் மலரை கையில் ஏந்தியபடி, சிவனுக்கு பூஜை செய்கின்ற வடிவில் மிகவும் பழமையான சிலை இருந்தது. இந்த கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கு பின்னர், அந்த சிலை காணாமல் போனது. மயில் சிலைக்குப் பதிலாக மற்றொரு சிலை அருகே வைக்கப்பட்டிருந்தது.

இந்த சிலை விவகாரம் வெளியில் தெரியவரவே மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. இது பற்றி துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பாக கடந்த ஜனவரி 31ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் அறநிலையத்துறை ஆணையரிடம் சராமாரி கேள்வி எழுப்பினர். உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையின் நிலை என்ன ஆட்சி எனவும் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வக்கீல் சண்முகசுந்தரம் கூறுகையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலேயே துறை ரீதியான விசாரணை நிறுத்தப்பட்டது என்றார். இரண்டு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணையை 6 வாரங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் வேண்டும். மேலும், உண்மை கண்டறியும் குழு விசாரணையையும் 6 வாரங்களுக்கு முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Source, Image Courtesy: Dinamani

Tags:    

Similar News