கொரோனா காலத்தில் பெறப்பட்ட சம்பளத்தில் 70 மதிப்பிலான கட்டிடம் கட்டி தந்த தலைமையாசிரியர் !
கொரோனா காலத்தில் பலர் மக்கள் சேவையாற்றுகின்றனர். உணவு, உடை இருப்பிடம் என தேவையான பல நன்கொடைகளை செய்கின்றன். இந்நிலையில், தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு கட்டிடம் ஒன்றை கட்டி தந்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துகுடி மாவட்டம், பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் நெல்சன் பொன்ராஜ் இவர் கொரோனா காலத்தில் பெற்ற சம்பளத்தில் அந்த பள்ளிக்கு சமயலறை, கழிவறை, பொருட்கள் வைக்கும் அறை ஆகியவற்றுடன் கூடிய பல்நோக்கு கட்டிடம் கட்டி தந்துள்ளார்.
இந்த கட்டிடம் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டிலானது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் படிக்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது. கொரோனா காலத்தில் ஆசிரியரின் இந்த செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது