தமிழக அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளை தொடங்க ரூ.75 கோடியை வழங்கும் மத்திய அரசு!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளை தொடங்குவதற்கு மத்திய அரசு ரூ.75 கோடியை வழங்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளை தொடங்குவதற்கு மத்திய அரசு ரூ.75 கோடியை வழங்க உள்ளது. கொரோனா தொற்றால் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தாலும் சரி, நகரத்தில் உள்ள தலைமை மருத்துவமனையாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியான கட்டமைப்புகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று உருமாறி தற்போது ஒமைக்ரான் தொற்றாக பரவி வருகிறது. இதன் பாதிப்பு தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. இதனால் மத்திய சுகாதார குழுவினர் சமீபத்தில் தமிழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்த ரூ.75 கோடியை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியில் இருந்து கொரோனா அவசர சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், நவீன முறையில் கழிப்பிட வசதிகள் ஆகியவைகள் மேம்படுத்தலாம். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.
Source: Dinamalar
Image Courtesy:The Indian Express