அரியலூரில் அஸ்திவாரம் தோண்டும் இடத்தில் 8 அடி உயரமுள்ள பெருமாள் சிலை கண்டெடுப்பு!
அரியலூர் மாவட்டம், கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் தனக்குச் சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த இரண்டு தினங்களாக ஆட்களை வைத்து அஸ்திவாரம் தோண்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஒரு இடத்தில் 4 அடி தோண்டியபோது கற்சிலை போன்று தென்பட்டது. அப்பொழுது அந்த அஸ்திவாரம் தோண்டிய இடத்தில் 8 அடி உயரமுள்ள பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மாலை ஒரு இடத்தில் 4 அடி தோண்டியபோது கற்சிலை போன்று தென்பட்டதையடுத்து. அதனை மேலே எடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் முற்பட்டனர். ஆனால் இருள் சூழ்ந்ததால் அந்த முயற்சியை கைவிட்டனர். அதனை அடுத்து இன்று காலை JCB இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினர் முன்னிலையில் அந்த சிலையை வெளியே எடுத்தனர்.
வெளியில் எடுத்த பின்னர் அங்கு இருந்த மக்கள் அந்த சிலையைச் சுத்தம் செய்தனர். அதற்க்கு பின்பு, அது கல்லால் ஆன 8 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை என்று அங்கு இருந்த மக்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் அந்த சிலைக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபட்டனர். இறுதியாக அந்த பெருமாள் சிலை, சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் வருவாய்த்துறை கோட்டாட்சியர் ஏழுமலையிடம் ஒப்படைக்கப்பட்டது.