தமிழகத்தில் தி.மு.க. அரசு திட்டமிட்டு கோயில்கள் இடிக்கப்படுவதற்கு ABVP மாநாட்டில் கண்டனம்!
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் 32 லட்சம் மாணவர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய மாணவர் அமைப்பாகும். ஏபிவிபின் 67வது அகில பாரத மாநாடு டிசம்பர் 24 முதல் 26 வரை ஜபல்பூர் மத்திய பிரதேசம் நடைபெற்றது. கொரோனா கால அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி இதில் நாடு முழுவதும் இருந்து 655 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (நேபாள், பங்களாதேஷ், அமெரிக்கா உட்பட ) நேரடியாகவும் 70763 நபர்கள் 2168 இடங்களில் இணையவழி மூலமாகவும் கலந்து கொண்டனர்.
கண்காட்சி:
1965இல் இந்திய இராணுவ போரில் மறைந்த கேப்டன் ரமன் பக்ஷீ அவர்ளது பெயரில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் செய்த சேவை பணிகள் குறித்த கண்காட்சி இடம்பெற்று இருந்தது. துவக்க நிகழ்ச்சி: துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசும்போது இன்று இந்தியாவில் பல நூறு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் உலகில் உள்ள பல்லாயிரம் பிரச்சனைகளுக்கான தீர்வு நம் தாய் நாட்டிடமே உள்ளது என்றார்''.
பேரா.யஸ்வந்தராவ் கேல்கர் இளம் சாதனையாளர் விருது 2021:
ஆண்டுதோறும் இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏபிவிபி சார்பாக பேரா.யஸ்வந்தராவ் கேல்கர் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதினை தமிழகத்தைச் சேர்ந்த திரு.கார்த்திகேயன் கணேசன் அவர்கள் (நிறுவனர் சிருஷ்டி அறக்கட்டளை) மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக செய்த சேவைகளை பாராட்டி ரூ.1 லட்சம் மற்றும் விருதும் வழங்கப்பட்டது.