அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று 25 நவம்பர் அன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.
2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2023ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தயார் செய்ய கடந்த சில வாரங்களாக பல்வேறு நிதி அமைப்புக்கள், நிறுவனங்களிடம் ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சகம் கேட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்று ஆலோசித்தனர். இச்சந்திப்பில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்றார்.
தேசிய சராசரியைவிட தமிழகத்தில் குறைவே
இந்த சந்திப்பை முடித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் கூறியதாவது, தமிழகத்தில் பணவீக்கம் தேசிய சராசரியை விட 2.5 சதவீதம் குறைவு என்றும். மேலும், மாநிலத்தில் குறைந்த பணவீக்க விகிதத்திற்கு முக்கியக் காரணம் விரிவான பொது விநியோக (PDS) முறை என்று அவர் கூறினார்.
அவர் கூறியது பொய்யா?
தமிழக நிதியமைச்சர் டெல்லியில் இப்படி கூறியது சமூகவளைதங்களில் பாஜக மற்றும் எதிர்கட்சிகள் இதனை பொய்யென ஆதாரத்துடன் அமல்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஆண்டிற்காண்டுக்கான மொத்த பணவீக்கம் எவ்வளவு தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியல் துறை அமைச்சகம் வெயிடும். இதேபோல் கடந்த மாதம் அதாவது அக்டோபர் மாதத்திற்கான புள்ளியலில் நாட்டின் மொத்த பணவீக்கம் 6.77 சதவீதமும், தமிழ்நாட்டில் அது 7.10 சதவீதம் என அமைச்சகம் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் மாதம் தமிழகத்தில் மொத்த பணவீக்கம் 6.93 சதவீதமாக இருந்தது, அது ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும் போது சராசரியாக 1.8 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்தில் பல பொய் வாக்குறுதிகளை 2021 தேர்தலின் போது அளித்து திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அதை நிறைவேற்ற முடியாமல் திக்குமுக்காடி வருகிறது திமுக அரசு. மேலும் மக்கள் மத்தியில் அத்திருப்தியை சம்பாதித்து வருகிறது இதனை மூடி மறைக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை திமுக ஐடி-விங்கைத் தொடர்ந்து இப்போது அமைச்சரும் அதை பின்பற்ற தொடங்கியுள்ளார் என்று மக்கள் புரிந்துக்கொள்கின்றனர்.