பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யாவின் கைது நடவடிக்கை.. கொதித்தெழுந்த பா.ஜ.க மேலிடம்..

Update: 2023-06-17 11:11 GMT

நேற்று நள்ளிரவு 11.15 மணி அளவில் பாஜக மாநில தலைவர் SG சூர்யா அவர்களின் வீட்டில் இருந்து போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி MP சு.வெங்கடேசன் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ட குற்றத்திற்காக தற்போது SG சூர்யாவை கைது செய்து இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாஜக மாநில செயலாளராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர் என்பது அனைவரும் அறிந்ததே.


குறிப்பாக எங்கு குற்றம் மறைக்கப் படுகிறதோ? அந்த குற்றத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதிலும், அநீதிக்கு எதிராக கேள்விகள் கேட்பதிலும் தொடர்ச்சியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்விகளை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் பெண்ணாடத்தில் நடந்த ஒரு தூய்மை பணியாளர் மரணத்தின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தான் இருக்கிறார், அவரை எதிர்த்து ஏன் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் எந்த ஒரு பதிலையும் கூறாமலும், நடவடிக்கை எடுக்காமலும் அமைதி காக்கிறார் என்பது தொடர்பாக கேள்விகள் அடங்கிய அறிக்கை ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையை காரணமாக காண்பித்து அந்த அறிக்கையின் மீது கோபப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பாஜக மாநில செயலாளர் SG சூர்யா மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவோடு இரவாக அவரை கைது செய்தது. மேலும் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அஸ்வத்தாமன் சேரன், பி.எல்.சந்தோஷ், சி.டி.ரவி ஆகியோர் தன்னுடைய கண்டன பதிவை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜே.சூர்யாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். 

Tags:    

Similar News