குற்றத்தை ஜீரணிக்க முடியாமல் திமுக செய்யும் நடவடிக்கை கைது - SG சூர்யா விவகாரத்தில் கொதித்த B.L.சந்தோஷ்!
தமிழக அரசியலில் தற்போது பெரும் பேச்சு பொருளாக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா அவர்களின் கைது நடவடிக்கை பார்க்கப்படுகிறது. குறிப்பாக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா அவர்களின் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் தன்னுடைய கண்டனத்தை அரசிற்கு தெரியப்படுத்த வருகிறார்கள். குறிப்பாக அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வெகுவாக வளர்ந்து வருகிறது. கைதுக்கும், மிரட்டலுக்கும் பயந்தவர்கள் பாஜகவினர் கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக தொடர்ச்சியான வகையில் தமிழக அரசுக்கு எதிராக தங்களுடைய கண்டன கோஷங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இருக்கும் பி.எல்.சந்தோஷ் அவர்களும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "தனது கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் கையாலாகாத செயலால் ஒருவர் இறந்தது தொடர்பாக மதுரை எம்.பி.யை விமர்சித்ததற்காக தமிழ்நாடு மாநிலச் செயலாளர் SG சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கூறிய தகவல்கள் உண்மைதான் என்றும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது அமைச்சர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியாமல் சகிப்புத்தன்மையற்றதாக மாறியுள்ளது.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்க மாட்டோம் என்பதை அறிவாலயம் புரிந்து கொள்ள வேண்டும். 1975-ல் எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய நாங்கள் இப்போது போராடுவோம். நீங்கள் தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்" என்று கூறினார்.