100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு ! ஊதியம் ரூ.300 ஆக நிர்ணயம் !

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.;

Update: 2021-08-13 07:56 GMT
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு ! ஊதியம் ரூ.300 ஆக நிர்ணயம் !

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும். சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு, அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு.

கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Source: Topnews

Image Courtesy: Toptamilnews

https://www.toptamilnews.com/100-day-work-plan-increased-to-150-days-daily-wage-increase-to-rs-300/

Tags:    

Similar News