100 ஆண்டு பழமையான மகிழீஸ்வரர் கோயில்: உண்டியல் உடைப்பு சம்பவம்?

நூறு ஆண்டு பழமையான கோவிலில் தற்பொழுது உண்டியல் உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டது.;

Update: 2022-11-24 06:09 GMT
100 ஆண்டு பழமையான மகிழீஸ்வரர் கோயில்: உண்டியல் உடைப்பு சம்பவம்?

கவுந்தப்பாடி அடுத்து உள்ள பெருந்தலையூர் பவானி ஆற்றங்கரையோரம் சுமார் 100 ஆண்டுகள் பழமையான மகிழேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பரிகார தெய்வங்களான விநாயகர், முருகர், பைரவர், நவக்கிரகங்கள், லட்சுமி, சரஸ்வதி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. மேலும் இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இங்கு ஒரு கால பூஜை நடந்து வருகிறது. கோவிலில் அர்ச்சகராக அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார். தினமும் இவர் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் இருப்பார்.


அதேபோன்று நேற்று இரவு அவர் 7 மணி வரை கோவிலில் இருந்து பூஜைகள் முடித்து நடை சாத்தி விட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். வழக்கம்போல் பின்னர் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்க வந்த அர்ச்சகர் தான் காத்திருந்தது அதிர்ச்சி. கோவில் நுழைவாயிலில் திறந்து மூலவர் இருக்கும் பகுதிக்கு சென்றபோது மூலவர் பகுதியில் உள்ள கதவில் போட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் நகைகள் கொள்ளடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்களின் செயல் காரணமாக இது நடைபெற்றது தெரியவந்துள்ளது.


இது குறித்து செயல் அலுவலர் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கோயில் செயல் அலுவலகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். பின்னர் கௌதம் பாடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு வந்து தடையங்களை சேகரித்தனர். பின்னர் கோவிலை சுற்றி பார்க்கும் பொழுது, சனீஸ்வரர் கோவில் பின்புறத்தில் இரண்டு மூட்டைகள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன. மூட்டைகளை பிரித்து பார்க்கும் பொழுது அதில் கோவிலில் கொள்ளை அடிக்க பட்ட நகை மற்றும் உண்டியல் பணம் இருப்பது தெரிய வந்தது. கவுந்தப்பாடி போலீசார் எப்பொழுதும் இரவு நேர ரோந்து செல்வது வழக்கம். அதேபோன்று நேற்று சென்றதால் சைரன் சத்தம் கேட்டு கொலைகாரர்கள் பணத்தை விட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News