ஒரு கோடி பெண்களில் நீங்களும் ஒருவரா.. ரூ.1000 பெற தகுதி என்ன..

தகுதி உள்ள மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று திமுக கூறியது எதன் அடிப்படையில்?

Update: 2023-03-30 01:37 GMT

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்த பொழுது மகளிருக்கு ரூபாய் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையின் போது இது பற்றி கூறுகையில், இது மகளிருக்கான உதவி தொகை என்று கூறாமல் அவர்களுக்கான உரிமை தொகை என்று கூற வேண்டும் என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் அறிவிப்பு வெளியாகும் பொழுது தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் தான் மாதம் 1000 வழங்கப்படும் என்று சூட்சகமாக தி.மு.க அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் தகுதி உள்ள குடும்ப தலைவிகள் என்று அவர்கள் குறிப்பிடுவது குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய உடல் உழைப்பை பெரிதும் பொருட்படுத்தாமல் வேலைக்கு செல்லும் பெண்களை பற்றி தான். சிறு வியாபாரம் செய்யும் பெண்கள் முதல் காலையில் எழுந்து கடற்கரைக்கு சென்று மீன்களை விற்கும் பெண்கள் வரை உரிமை தொகை பெற தகுதி உள்ளவர்கள் என்று தி.மு.க சார்பில் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது. இதற்காக இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் இன் பொழுது 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.


மகளிருக்கான இந்த ஒரு உரிமை தொகை செப்டம்பர் மாதம் முதல் மாதம் ரூபாய் 1000 பெற முடியும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கிடும் பட்சத்தில் ஏழு மாதங்களுக்கு 7 ஆயிரம் சுமார் ஒரு கோடி பெண்கள். எனவே இந்த நிதியாண்டிற்கு 7000 கோடி நிதி இந்த ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஒரு கோடி பெண்கள் யார் என்பது தற்போது வரை தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

Input & Image courtesy: News

Tags:    

Similar News