பழங்கால சிலைகள் வீட்டில் பதுக்கி வைத்த கும்பல்: கச்சிதமாக சிறைப்பிடித்த போலீசார்!
பழங்காலத்தை சேர்ந்த 15 சிலைகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு ஆவண பதிவும் இன்றி புத்தர், ராமர் உள்ளிட்ட 15 பழங்கால சிலைகள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தற்போது மீட்க பட்டு இருக்கிறது. திருவான்மியூர் பகுதியில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக சுவாமி சிலைகள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் இந்த வீட்டில் நடராஜர், ராமர், புத்தர், விநாயகர் 15 சிலைகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள் சிலைகளை சேகரிக்கும் நபர்களிடம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுசீந்திரன் என்பவர் தங்களிடம் உள்ள பழங்கால சிலைகளை விற்பனை செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததன் பெயரில் போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்திருக்கிறது. சிலைகளை வாங்குவது போல் கூறி அவர்களை ஏமாற்றி 15 சிலைகள் புகைப்படங்களை பெற்று இருக்கிறது. பின்னர் கச்சிதமாக அவர்களை வரவழைத்து சிலைகளை கைப்பற்றினர். போலீசார் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுசீந்திரன் சிலைகள் அனைத்தையும் சென்னை திருவான்மியூர் பகுதியில் ஒரு வீட்டில் உள்ளது.
நானும் அங்கே இருக்கிறேன் என்று கூறுகிறார். இதன் காரணமாக வீட்டில் சென்று போலீசார் அவர்களை பிடித்து இருக்கிறார்கள். இவர்களிடம் கைப்பற்றப்பட்ட அம்மன் சிலை, தேவி, புத்தர், நந்தி, நடராஜர், ஆஞ்சநேயர் போன்ற சிலைகள் பல கோடி மதிப்புள்ள என்பது தெரிய வந்து இருக்கிறது. இவை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Hindu News