+2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்த கூலி தொழிலாளியின் மகள்!
+2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்று கூலி தொழிலாளியின் மகள் வரலாற்று சாதனை.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவு தாமதமாகவே வெளிவந்து இருக்கிறது. கடந்தாண்டி போல இந்த ஆண்டு மாணவர்களை காட்டிலும் மாணவிகள் நான்கு சதவீதம் அதிகமாக வெற்றி பெற்று இருக்கிறார்கள். பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று என்று 6 பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து மாணவி நந்தினி கூறுகையில், "இவ்வளவு மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். படிப்பு மட்டும் சொத்து என்று கூறி தான் பெற்றோர்கள் என்னை வளர்த்தார்கள். படிப்பதுதான் எனது சொத்து என்று நினைத்து படித்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்துள்ளது" என்று கூறினார்.
இன்று வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி செல்வி. நந்தினி 600/600 பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரைப் பார்த்து அதற்காக தமிழர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தொலைபேசி மூலமாக மனைவி நந்தினிக்கு பாராட்டுக்கள் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar